2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி பண்டிகை மலையகத்தில் சோபிக்கவில்லை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்து மக்கள் விசேடமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை மலையகத்தில்  சோபிக்கவில்லை என்றும்  இதற்கு காரணம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தீபாவளி முற்பணம் பெற்றுக்கொடுக்க அதிகாரத்திலுள்ள தொழிற்சங்க அரசியல்  தலைமைகள்    தவறிவிட்டார்கள் என   இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  மேலும் கருத்து கூறுகையில்,

கடந்த காலங்களில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்தகாலத்திலும் கூட தீபாவளி முற்பணம் முறையாக பெற்று பெருந் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினார்கள். ஆனால் இம் முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையாக தீபாவளி முற்பணம் கிடைக்கவில்லை. இதனை பெற்றுக்கொடுக்க அதிகாரத்திலுள்ள தொழிற்சங்க அரசியல் தலைமைகளும் முயற்சி செய்யவில்லை.

நாட்டிள் தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்கள் இறைச்சி வகைகள்  உடை துணிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி திருநாளை மலையக பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X