2025 மே 05, திங்கட்கிழமை

தீபாவளிப் பண்டிகையன்று பதுளையில் மதுபானசாலைகளுக்குப் பூட்டு

Gavitha   / 2020 நவம்பர் 11 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

தீபாவளிப் பண்டிகையன்று, பதுளை மாவட்டத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, இலங்கை மதுவரித்திணைக்களத் தலைமையக பிரதி ஆணையாளர், பதுளை மாவட்ட அரசாங்க அதிபருக்கு, சுற்றுநிரூபமொன்று அனுப்பி வைத்துள்ளார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, இந்தச் சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரவிந்தகுமார் அனுப்பியிருந்தக் கடிதத்தில், மக்கள் நலன் கருதி, தீபாவளி மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்தில், மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மட்டும் மூடுவதற்கு அனுமதி வழங்கியுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X