Freelancer / 2022 மார்ச் 08 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பண்டாரவளை மாநகரில், பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரியளவிலான தீப் பந்தப் போராட்டமொன்று நேற்று இரவு 7 மணியிலிருந்து 10 மணிவரை இடம்பெற்றது.
ஆண்களும், பெண்களுமாக பெருந்திரளானோர் இப் போராட்டத்தில் தீப்பந்தங்களுடன் ஈடுபட்டிருந்தனர்.
பண்டாரவளை மாநகர சபை மைதானத்திலிருந்து, போராட்டக்காரர்கள் பேரணியாக பண்டாரவளை மாநகர் வழியாக, அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று மணி நேரமாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணி நேரம் தடைப்பட்டு, வாகன நெரிசல்களும் இடம்பெற்றிருந்தன.
மின் துண்டிப்பு நெருக்கடி, எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கண்டித்தே மேற்படி எதிர்ப்பு தீப்பந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. (R)





3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026