2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தீயில் கருகிய தாயும் உயிரிழந்தார்

R.Maheshwary   / 2022 மார்ச் 30 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கட்டுகஸ்தோட்டை- மெனிக்கும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இந்த மாதம் 24ஆம் திகதி அதிகாலை வீடொன்று தீப்பற்றி எரிந்ததால், தந்தை, மகள், மகனுடைய காதலன் என மூவர் சம்பவ இடத்தி​லேயே தீயில் கருகிய  உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பலத்த எரிகாயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ராணி என்ற 65 வயது பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் காதலனாலேயே தீப்பற்ற வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X