2025 மே 05, திங்கட்கிழமை

தீயில் சிக்கி உயிரிழந்த தாய்

Freelancer   / 2023 நவம்பர் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை  - பன்விலதென்ன, லொராவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 94 வயதுடைய தாய் தனது அறையில் தீப்பிடித்த நிலையில் படுகாயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புப்புரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயின் 5 பிள்ளைகளும் அதே கிராமத்தில் வசிக்கின்ற போதிலும், தாய் தனது  வீட்டில் தனியாக வசித்து வருவதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
 
பிள்ளைகளே உணவு மற்றும் தேவையானவற்றை வழங்கியுள்ளனர், மேலும் அவர் வயதாகிவிட்டாலும் தனியாகவே தனது வேலைகளைச் செய்வார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மதியம் மூன்று மணியளவில், அவரது மருமகளில் ஒருவர், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார், இந்த வீட்டின் திசையில் இருந்து புகை வருவதைக் கண்ட அவர், உடனடியாக வந்து தாய் இருந்த அறையைப் பார்த்தார். 

அங்கு தீப்பரவியுள்ள நிலையில், தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.

கம்பளை பதில் நீதவான் திருமதி நந்தனி காந்திலதா இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X