Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 30 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை மக்களின் இனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கொண்டுவரவிருக்கும் தீர்வு திட்டத்தில் மலையக இந்தியாவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்களையும் உள்வாங்க வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் அப்படியான ஒரு தீர்வுத்திட்டத்தை கொண்டு வந்தால் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும் என்றார்.
நுவரெலியாவில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நகர, கிராம பகுதியில் வாழும் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது கிராம உத்தியோகத்தர்களிடம் முறையிட்ட பின்னர் கிராமஉத்தியோகத்தரால் பிரதேச செயலகங்கள் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது.
ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது தோட்டக்கணக்கப்பிள்ளை ஊடாக தோட்ட துரைமார்களிடம் கூறும் பொழுது, தோட்டத்துரை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்கின்றார்.
பொலிஸார் முறைபாடு செய்தவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மிரட்டி பயமுறுத்தப்படுகின்றார்கள். முறைப்பாட்டிற்கு தீர்வும் கிடைப்பதில்லை. இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.
மலையக இந்தியவம்சாவழி மக்களையும் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும். அன்றுதான் மலையகத்தில் வாழும் இந்தியவம்சாவழி மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
மலையகத்தில் 200 வருடங்களுக்கு மேல் வாழும் இந்தியவம்சாவழி மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்துவது சம்பந்தமாக பேசப்பட வேண்டும்.
இதுவும் தள்ளி போகின்ற பிரச்சினையாக இருக்கின்றது. இன்று நாங்கள் பிரஜாவுரிமை பற்றி பேசவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் சுயமான வாழ்க்கை நிலைமையையும் செயல்படுத்த வேண்டும். என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .