Janu / 2025 ஜனவரி 29 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் லிந்துலை மெரயா நகரில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மெராயா நகரில் வீதிகளில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன.மேலும் வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்டன. பாடசாலை மாணவர்கள் மற்றும் நகரவாசிகளுக்கு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், ஊழியர்கள், லிந்துலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், லிந்துலை சுகாதார மற்றும் வைத்திய அலுவலக அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மெரயா பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பி.கேதீஸ்


7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025