R.Maheshwary / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கடந்த 2ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டனிலிருந்து தூர இடங்களுக்கான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.
டீசல் பிரச்சினை காரணமாக, அதிகமான தனியார் பஸ்கள் இன்று (4) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அவை போதுமானளவு சேவையில் ஈடுபடவில்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026