2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேனில் இடறிய இளைஞன் மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய கற்பாறையில் சுமார் 100அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தேன் கூட்டில் இருந்து தேனை எடுத்துக்கொண்டிருந்த இளைஞன், காலிடறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. 

 மடுல்சீமை பகுதியில் உள்ள மலையொன்றுக்கு  தேன் எடுப்பதற்காக, தனது இரு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(08) சென்றுள்ளார்.

வாளியொன்றினுள் தேனை சேகரித்துள்ளார். வாளியில் ராட்டுடன் இருந்த தேன், அவர் நின்றிருந்த பாறையின் மீது சிந்தியுள்ளது. அதனை கவனிக்காது, கால்களை வைத்த அவ்விளைஞன், பாறையில் இருந்து வழுக்கி கீழே விழுதுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை, மீட்ட சக நண்பர்கள் இருவரும் அவரை   பசறை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றர். எனினும், வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பதுளை மடுல்சீமை பகுதியை சேர்ந்த 26 வயதான தங்கையா புஷ்பகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X