2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேயிலை தொழிற்சாலையில் பாரிய தீ

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி - பன்விலை, ராக்‌ஷாவ தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது தொழிற்சாலையில் ஒரு பகுதியில் இத் தீ ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ காரணமாக தொழிற்சாலையின் கட்டிடத்திற்கும், இயந்திரங்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்டிருந்த பெருந்தொகை தேயிலையும் சேதமாகி உள்ளது.

இத் தீ ஏற்படுவதற்கு காரணம் இன்னும்  கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X