2025 மே 17, சனிக்கிழமை

தேயிலைக் காணிகளின் கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை - டெல்மார் மேல்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (14) காலை அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகம் டெல்மார் மேல்பிரிவு தோட்டத்திற்குரிய தேயிலைக் காணிகளில் " யூக்கலிப்டஸ் "மரக்கன்றுகளை நடுவதற்கு எடுத்த முயற்சியினை கண்டித்தே தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

டெல்மார் தோட்டத்தை பிரவுஸ் கம்பனி பொறுப்பேற்றதன் பின்னர், பல ஹெக்டேயர் தேயிலைக் காணிகளில் தேயிலை மரங்களுக்கு இடையிலும், ஓரங்களிலும் " யூக்கலிப்டஸ் " மரக் கன்றுகளை நிர்வாகம் நாட்டி வருகிறது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் தேயிலைக்கு  பாரிய பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம்  " யூக்கலிப்டஸ் " மரங்கள் ஊடாக பாரிய இலாபத்தை அடைய திட்டமிட்டு தேயிலையை அழிக்க திட்டமிடுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தேயிலை நிலங்களில்   " யூக்கலிப்டஸ் " மரக்கன்றுகளை நடுவதால், தேயிலைக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டு பின் தேயிலை விளைச்சல் குறைந்து விடும்.இதனால் தொழிலாளர்கள் தொழிலை இழக்க நேரிடுவதுடன் தேயிலை மலைகள் காடாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

உடப்புஸ்ஸலாவை எனிக் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்  " யூக்கலிப்டஸ் " மரக்கன்றுகளை  டெல்மார் தோட்ட நிர்வாகம் கொண்டு வந்து நடுவதற்கு தொழிலாளர்கள் நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டுள்ள நிலையில்,தோட்ட நிர்வாகத்தின் பணிப்பினை நிராகரித்து, கொண்டுவரப்பட்ட மரக்கன்றுகளை மீண்டும் வெளியில் எடுத்து செல்லும்படி வழியுறுத்தி பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .