Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரியுள்ளார் எனத் தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கான மக்கள் ஆதரவு அலை இன்னமும் குறையவில்லை. இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களின்போது இது நிரூபணமானது. மக்கள்தான் கூட்டணியின் ஆலமரம். அந்த சக்தி எமது பக்கம் உள்ளது.
எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என ராஜபக்சக்கள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைப்பதே இதன் நோக்கம். ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே விஜயதாச ராஜபக்ச இவ்வாறு செயற்பட்டிருப்பார். எனவே, தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளது.
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார். உள்ளூராட்சி தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago