Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஒஸ்போன் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் பலர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், நோட்டன் பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தும் மக்கள் சந்திப்பு, நுவரெலியா மாவட் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான் தலைமையில், ஒஸ்போன் தோட்டத்தில், திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போதே, தொழிலாளார் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் பலர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.
இச்சந்திப்பில், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ராஜதுரை, ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர்களான எஸ்.அருள்சாமி, அனுஷியா சிவரஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, வெளிஓயா, செனன், அகரகந்த, கரோலினா, டிக்கோயா, லெதண்டி, ஒஸ்போன் உள்ளிட்ட பல தோட்டங்களிலும் இ.தொ.கா மக்கள் சந்திப்பை திங்கட்கிழமை நடத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
9 hours ago