2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தொங்கும் குளவி கூடுகளால் ஆபத்து

Editorial   / 2022 நவம்பர் 08 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ்

தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் காணப்படும் குளவிக் கூடுகளால் பயணிகளும் பிரதேச மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பஸ் நிலையத்தில்  பல இடங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் காணப்படுவதுடன், இந்தக் குளவிக் கூடுகளைச் சுற்றி காகங்கள் மற்றும் புறாக்கள் சுற்றித்திரிவதால் எந்த நேரத்திலும் இந்தக் குளவிக் கூடுகள் கலைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இதனால்  மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வருவோர் என பலரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு குளவிக்கூடுகளை விரைவில் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்ம உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .