Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டனுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை, வட்டவளை பொலிஸார், நேற்று மாலை கைது செய்துள்ளனர்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்ட முகாமையாளரின் பங்காளா உட்பட அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் கொள்ளையிட்டு வந்ததாக கூறப்படும் இருவரே, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிவாயு சிலின்டர் உட்பட மின்னியல் உபகரணங்கள் பலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தேயிலை மலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .