Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு ஆதரவாக குரல்கொடுத்தமைக்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர்ப்பலகையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக பல மட்டங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவல் தொல்திருமாவளவனும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அவருக்கு நன்றிகூறும் வகையில் இ.தொ.கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மலையக மக்களதும் அதன் மாபெரும் தலைவரதும் உணர்வுகளையும் உள்ளத்துடிப்பையும் புரிந்துகொண்டு, தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் தனது குரலைப் பகிரங்கமாக உயர்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
“ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தவர்களுக்கு மத்தியில், எங்கோ இருந்துகொண்டு உண்மையின் உணர்வலைகளை தட்டிக் கேட்கத் தயங்காத தமிழகப் புரட்சித் தலைவர் தோழர் தொல்திருமாவளவனின் நடவடிக்கைகள், எமது பணிகளுக்கு மேலும் தெம்பூட்டுகிறது. உண்மை ஒரு போதும் உறங்கிவிடாது என்று, தமிழர்களின் இதயத்தில் என்றும் நீங்காத இடம்பிடித்திருக்கும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அன்று கூறிய வாக்கு இன்று தெய்வீக வாக்காக நிருபணமாகி வருகின்றது.
“எவ்வாறாயினும் இலங்கையில் மாட்டுமல்லாது எங்கெல்லாம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தோழர் தொல்திருமாவளவனின் உணர்ச்சிக் குரல் துயர் துடைக்கும் என்பதில் நாம் நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றோம். உங்கள் பணி சிறக்க இந்திய வம்வாசளி மக்கள் சார்பில் எமது நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
9 hours ago