R.Maheshwary / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டோம் என்ற பெயரைப் போட்டுக்கொள்ளும் இந்த அரசாங்கம் ,முற்று முழுதாக இந்த மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை புறக்கணித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரிசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரித்ததாக காட்டி அவர்கள் கடந்த காலங்களில் பெற்ற 750 ரூபாய் சம்பளத்தையேனும் தற்போது நாளொன்றுக்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு அரசாங்கம் தொழிலாளர்களை தள்ளிவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுடன் சலுகைகளும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. கூட்டு உடன்படிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இந்த அரசாங்கம் மலையக மக்களை நசுக்குகின்றது என்றார்.
அத்துடன் பொருளாதார ரீதியாக மலையக மக்களுக்கு பாரியளவிலான சுமைகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது. இவ்வாறான நிலையில் சில நாள்களில் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை வழக்கை காட்டி, காலத்தை இழுந்தடிப்பு செய்த வேலையையே அரசாங்கம் செய்து வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
எனவே, இன்று பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பல்வேறு பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. பொருளாதார சுமையினால் பாரயளவில் பெருந்தோட்ட மக்கள் நசுக்கப்படுகின்றார்கள். இவ்வாறான நிலையில் சம்பள விடயத்தில் இழுத்தடிப்புகளை செய்யாது இந்த மக்களுக்கான 1000 ரூபாய் சம்பளத்தை நியாயமாக பெற்றக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026