2025 மே 05, திங்கட்கிழமை

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

Freelancer   / 2023 நவம்பர் 20 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரியவன்ச

பதுளையிலிருந்து தோட்டத் தொழிலாளர்களை கந்தகெதர நோக்கி ஏற்றிச் சென்ற தனியார் பஸ்  ஒன்று பதுளை அலுகொல்ல கொஹோவில  பகுதியில்  இன்று (20)  விபத்துக்குள்ளானது. 
விபத்துக்குள்ளான பஸ்  பலத்த சேதமடைந்ததுடன்  அதில் பயணித்த தோட்டத் தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் பஸ்இ பதுளையிலிருந்து பதுளை - அலுகொல்ல வழியாக கந்தகெதர நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதுஇ திடீர் தொழில்நுட்பக் கோளாறு  ஏற்பட்டதில்  சாரதி வீதிக்கு அருகில் உள்ள அணைக்குள் பஸ் வீழாதவாறு அதனை  நிறுத்த முற்பட்டபோது அது வீதியில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்தபோதுஇ பஸ்ஸில் இருபது தோட்டத் தொழிலாளர்கள் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.    M 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X