2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்களை மிரட்டுவதற்கு இடமளிக்கமுடியாது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 04 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிலாளர்களை, சிஐடியினரை களமிறக்கி அச்சுறுத்தும் செயலை தோட்ட நிர்வாகங்கள் உடன் நிறுத்த வேண்டும் என தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான்,  இல்லையேல் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் எச்சரித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் அலுவலகத்தில் இன்று (4)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஹொரன பெருந்தோட்ட நிறுவனம், தொடர்ச்சியாக அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. தொழில் சட்டங்கள் மதிக்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இதற்கு இடமளிக்கமுடியாது.

மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் தொழிலாளர்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை ஒரு கிராம் கொழுந்தைக்கூட வெளியேற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். கம்பனிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அது அவர்களுக்கே பாதிப்பு. தேயிலை ஏலத்துக்கு உரிய நேரத்தில் உற்பத்தியை வழங்காவிட்டால் அவர்கள்தான் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே, எமது போராட்டம் தொடரும் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .