Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை -ஹைபொரஸ்ட் இலக்கம் 01 தோட்ட தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரசாயன உரம் மற்றும் மருந்து வகைகளில் ஒரு தொகை காணாமல்போயுள்ளமை தொடர்பில், களஞ்சியசாலைக்கு பொறுப்பான உத்தியோகஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
தோட்டத் தொழிற்சாலை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சத்து 59 ஆயிரத்து 309 ரூபாய் பெறுமதியான உரம் மற்றும் மருந்து வகைகள் காணாமற் போயுள்ளன.
நவம்பர் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் இந்த மாதம் 12ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவை காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தோட்ட அதிகாரி, ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் களஞ்சியசாலைக்கு பொறுப்பான உத்தியோகஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளையடுத்து, சந்தேக நபரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .