Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க கோரி பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட தொழிலாளர்களினால் திங்கட்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து
கொண்டனர். “தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே” . “எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தா”.போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷசங்கள்யிட்டும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும், “நாளாந்த பெறுகின்ற ஆயிரம் ருபாய் சம்பளம் போதாது நாட்டில்
அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத ஒரு சூழ் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் ஆகவே நாட்டின் ஜனாதிபதி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எமக்கான உரிய ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்
12 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
39 minute ago