2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

வீடமைப்புத் திட்டத்துக்குப் பொருத்தமற்ற இடத்தை, தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு, ஹட்டன் ஸ்டெதன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று (21) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படித் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால், தனி வீட்டுத் திட்டத்தின் கீழ், 50 வீடுகள் மேற்படித் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ளன.

குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளற்றப் பகுதியிலேயே, தமக்கான வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத் தந்த தோட்ட முகாமையாளர் லலிந்திர அபேவர்தன, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பயனாகளின் விருப்பத்துக்கு இணங்கவே,  குறித்த இடத்தை, வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கியதாகக் குறிப்பிட்டார்.

எனினும் குறித்தக் காணியில் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதில் பயனாளிகளுக்கு விருப்பமில்லை எனில், அதுத் தொடர்பில் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்றைக் கையளித்தால், தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடித் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக, டிக்கோயா மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .