2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பணி பகிஷ்கரிப்பு

Editorial   / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கௌசல்யா

ஹட்டன் பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிந்துலை ஹோல்றீம் தோட்டத்துக்கு உரிய ஆறு தோட்ட பிரிவுகளில் நான்கு தோட்டங்களை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்து பணி பகிஷ்கரிப்பிலும் போராட்டத்திலும் புதன்கிழமை (07) ஈடுப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு ஆறாம் மாதத்திற்கு பின் கடந்த நான்கரை வருடங்களாக தொழிலாளர்களின் சம்பள பணத்தில் தோட்ட நிர்வாகம் பிடித்துள்ள ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக மத்திய வங்கி வழங்கும் அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை.

இது குறித்த முறைப்பாடுகள் தோட்ட நிர்வாகத்திடம்  பலமுறை முன்வைத்தும் இதுவரை உரிய தீர்வு கிட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியும் நான்கு தோட்டங்களை சேர்ந்த 350 க்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கஷ்டப்பட்டு கொழுந்து பறித்து சேமித்த பணத்தில் தோட்ட கம்பனி கைவைத்து வயிற்றில் அடிக்க கூடாது என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஹோல்றீம் தோட்டத்தில் கடந்த 4 1/2 வருடங்களாக முகாமைத்துவம் செய்து வரும் முகாமையாளர்? ஊழியர் சேமலாப  நிதி விடயத்தில் தவறு இழைத்துள்ளது எமக்கு கிடைக்க வேண்டிய மத்திய வங்கி பற்று சீட்டு உரிய காலப்பகுதிகளில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் தொழிலாளர்கள் இதன்போது முன்வைத்தனர்.

அதேநேரத்தில் இந்த விடயத்தில் தீர்வை பெற்று தருமாறு தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தோட்ட துறைமார்களின் கவனத்திற்கும் அடிக்கடி கொண்டு வந்தும் பயனேதும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

அதேபோல இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியிடம முறையிட்ட போது மத்திய வங்கிக்கு ஹோல்றீம் தோட்டத்திலிருந்து தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊ.சே.நிதியின் தொழிலாளர் பெயர் பட்டியல் தொடர்பான பெயர் விபரங்களில் தோட்ட நிர்வாகம் பிழையாக குறிப்பிட்டுள்ளது என மத்திய வங்கி தெரிவித்ததாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எது எவ்வாறாயினும் நான்கரை வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த தவறுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முதற்கட்ட போராட்டத்தில் குதித்துள்ளதாக பெண் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரத்தில் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த தோட்ட அதிகாரி எரன் ராமநாதன் உள்ளிட்ட தோட்ட கம்பனி பிராந்திய முகாமையாளர்கள் இம்மாதம் (29) திகதிக்குள் தீர்வை பெற்று தருவதாகவும் பணி புறக்கணிப்பை கைவிட்டு வியாழக்கிழமை (08) காலை தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X