R.Maheshwary / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட
முகாமையாளரின் உருவ பொம்மையை எரித்து, நேற்று (19) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த 17 வருடங்களாக பிடிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு என்ன நடந்தது என தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூற மறுக்கின்றமை, தோட்ட நிர்வாகம் தம்மை பழிவாங்குவதாக கூறி தோட்ட முகாமையாளரின் உருவபொம்மையினை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட முகாதையளரின் அராஜகம் குறித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, இதுவரை எவ்வித தீர்வும் இல்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மலையக அரசியல்வாதிகள் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .