2025 மே 15, வியாழக்கிழமை

தோட்டக் கம்பனிகளுடன் முரண்பட்டு பயணிக்க முடியாது

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

1000 ரூபாய் சம்பள உயர்வின் பின்னர், தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையில் முரண்பாடு நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், . இவ்வாறு முரண்பட்டு பயணிக்கவும் முடியாது என்றார்.

மாத்தளை நகர மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

கூட்டு ஒப்பந்தத்துக்கு வருகின்றோம் என கூறும் கம்பனிகள், முதுகுக்கு பின்னால் வேறொன்றை செய்கின்றது. வழக்கு தொடுக்க முற்படுகின்றது என்றார்.

 அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றோம். இந்த வாய்ப்பை கம்பனிகள் தவறவிட்டால், நாம் சம்பள நிர்ணய சபைக்கு நிச்சயம் செல்வோம். 2 ஆயிரம் முதல் 2, 500 வரை சம்பள உயர்வு கோரப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .