2026 மே 06, புதன்கிழமை

தோட்டப்புறங்களில் சுகாதா வசதிகளை துரிதகதியில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முகமாக, அரசாங்கமும் சுகாதார துறையும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் வேளையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கும் அதனை அண்மித்துள்ள கிராமங்களுக்கும் தேவையான சுகாதார வசதிகளை துரித கதியில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான சட்டத்தரணி பாரத் அருள்சாமி, நேற்று (9) வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது கருத்துரைத்த அவர், நான்கு வருடங்களுக்கும் மேலாக, பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வழங்கப்படாது இருந்த மருந்துகளை, இனி தங்கு தடை இன்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட செயற்றிட்டத்தின் கீழ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு அமைய கடந்த வாரம், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜெயசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம், தோட்ட வைத்தியசாலைகளுக்கு, மருந்துகளை விநியோகிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைவாக, தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான அடிப்படை மருந்துகள், நேற்று (9) முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிதர்ஷனிவுடன்  மேற்கொண்ட கலந்துரையாடலில், கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளபட்டுள்ள சுகாதர நடவடிக்கைகள்,  தோட்ட, கிராம பகுதிகளுக்கு  சேவைகள் வழங்கப்படும் பொறிமுறை என்பன பற்றி ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தோட்ட பகுதிகளில் வாழும் கிளினிக் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை பெறுவதற்காக, தோட்ட வைத்திய அதிகாரிகள்  நலன்புரி அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும், தனியார் தோட்டங்கள், கிராம பகுதிகளில் கிராம சேவகர் மற்றும் தோட்ட முகாமையாளர் மூலமாக மாவட்ட வைத்திய அதிகாரி, பொதுசுகாதார அத்தியட்சகர் மூலமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் பெற்று தரும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .