R.Maheshwary / 2022 மார்ச் 20 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் பணியாளர்களால், ஹட்டன் நகரில் சேகரிக்கப்படும் கழிவுகள், ஹட்டன் நட்சத்திர சதுக்கப் பகுதிக்கு அருகிலுள்ள ஞாயிறு சந்தை வளாகத்தில் எரிக்கப்படுவதால், பிரதேசவாசிகள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் தரப்பிடத்துக்கு வரும் பயணிகள் உள்ளிட்டவர்களும் பாரிய சுவாசப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹட்டன்- டிக்கோயா நகரசபை பணியாளர்களால் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை குறித்த சந்தை வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, எரிக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தக் கழிவுகள் எரியூட்டப்பட்டு, அதிலிருந்து வெளிவரும் புகை பிரதேசமெங்கும் பரவுவதால், அனைவரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹட்டன்- டிக்கோயா நகரசைபையின் சுகாதாரப் பிரிவினரிடம் வினவியபோது,ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் ஓட்கோட்டகளை செலுத்தி வருமானம் தேடுபவர்கள், அதிகாலை நேரங்களில் குளிர் காய்வதற்காக, இவ்வாறு கழிவுகளுக்கு தீவைத்து கொழுத்துவதாக குற்றஞ்சுமத்தியதுடன், நகர சபை பணியாளர்களால் குறித்த இடத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள், பின்னர் தரம் பிரிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், பணியாளர்கள் கழிவுகளை தீவைத்து எரிப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026