2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நகரசபை பணியாளர்களின் பொறுப்பற்ற செயல்

Freelancer   / 2022 நவம்பர் 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் சில பணியாளர்கள் உரியமுறையில் சேவையில் ஈடுபடாமையால் ஹட்டன் நகரில் ஆங்காங்​கே குப்பைகள் தேங்கிக் கிடப்பதுடன் வடிகான்களில் மணல், மண் நிறைந்திருப்பதாகவும் இதனால் பலருக்கும் அசௌகரியம் ஏற்படுவதாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஏ.பி.அனுரத சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இன்று நகரிலுள்ள பல வடிகான்களில் மண், மணல் நிறைந்து காணப்படுகின்றது. அவை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தப்படாமையால் மழைக்காலங்களில் வௌ்ளநீர் வீதி, வர்த்தக நிலையங்களுக்குள் செல்கின்றது.

அதேப்போல் கழிவுகளும் உரியமுறையில் அகற்றப்படுவதில்லை என தெரிவித்த அவர், இதற்கான பிரதான காரணம் நகரசபையின் சில பணியாளர்கள் உரியமுறையில் தமது கடமைகளைச் செய்ய முன்வருவதில்லை. 

சிலர் மதுபானசாலைகளிலும் சிலர் வெவ்வேறு கூலித் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.

குறித்த பணியாளர்களுக்கு நகரசபையால் வழங்கப்பட்ட ரெயின்கோட், பூட்ஸ், உபகரணங்கள் எதுவும் அவர்களிடம் தற்​போது இல்லை என்றும் குறித்த பொருள்கள் அவர்களால் விற்கப்பட்டு விட்டனவா அல்லது அவர்களின் வீடுகளில் உள்ளனவா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் ஏ.பி.அனுரத சில்வா கேட்டுக்கொண்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .