2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நடமாடாத நடமாடும் வாகனங்கள்

R.Maheshwary   / 2021 மே 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கிர்த்திரத்ன

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாத்தளை மாவட்ட மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் உரிய முறையில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்படாமையால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அரசாங்கத்தால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இந்த வாய்ப்பு மாத்தளை நகரை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்களுக்கு கிடைத்தாலும் கிராமங்கள் மற்றும் தோட்டப்புறங்களுக்கு  அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமது நிலைமைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து, உரிய நடவடிக்கையை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X