2025 மே 17, சனிக்கிழமை

நடமாடும் சிறுத்தையால் நியூகொலனி மக்கள் அச்சத்தில்

R.Maheshwary   / 2023 ஜனவரி 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக  அக்கரப்பத்தனை -நியூ கொலனி பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும்   கடந்த சில நாட்களாக சிறுத்தையின்  நடமாட்டம் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில்  வசிக்கும்    எஸ் நாகராஜ் என்பவரின்  வீட்டுக்கு சிறுத்தை ஒன்று, இரவில் வந்து செல்லும் காட்சி, அவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி .சி. டி.வி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .