2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

நட்ட ஈடு வழங்குமாறு சென் கூம்ஸ் மக்கள் எதிர்ப்பு

சுஜிதா   / 2020 ஜூன் 04 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன், 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் தமக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் தெரிவித்து, இன்று (04) காலை பணிக்குச் செல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சக்திவேல், இது தொடர்பாக, தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடினார்.

இதன் பின்னர். மக்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதாக தோட்ட நிர்வாகம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

தோட்டத்தில் காணப்படும் குளவிக்கூடுகளை அகற்ற வேண்டும்,  உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் குளவிக் கொட்டில் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்குமு் நட்ட ஈடு வழங்குதல், காடாகி வரும் தேயிலை மலைகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், . தோட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகளே, தோட்ட மக்களால் விடுக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .