2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நட்டஈடு கோரி கொட்டும் மழையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்லேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தால் நில தாழிறக்கத்துக்கு உள்ளான குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்கள், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்கல, பொல்பிட்டிய பகுதியில் நேற்று (25) கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“களனி ஆற்றை மறித்து நிர்மாணிக்கப்படும் போட்லேண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு பொல்பிட்டியவில் இருந்து கித்துல்கல, கல்பொத்தாவல வரையில் 5 கிலோமீற்றர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

“இதனால் ஏற்பட்ட நில தாழிறக்கத்தால் 34 குடியிருப்புகள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தன. இதற்கு நட்டஈடு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 27 குடியிருப்பாளர்களுக்கு வாடகை வீட்டில் தங்குவதற்காக மாதாந்தம் வாடகைப்பணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

“இருப்பினும், இதுவரையில் எமக்கான நட்டஈடு பணத்தை வழங்கவில்லை. மீன் உற்பத்தி நிலையத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ள போதிலும், பாதிக்கப்பட்டுள்ள எமக்கு இதுவரையில் ஈட்டஈடு வழங்க அரசாங்கம் முன்வரவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, மின் நிலைய கட்டுமான பொறுப்பதிகாரி கமல் லக்ஷிர இரண்டு மாதத்துக்குள் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடிதம் முலம் அறிவித்ததையடுத்து, ஆர்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .