2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நத்தார் தினத்திலும் வெடிப்பு சம்பவம்

Freelancer   / 2021 டிசெம்பர் 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

நத்தார் தினமான இன்று ஹட்டன் - ருவன்புர பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் இன்று (25) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அடுப்பு சேதமடைந்துள்ளது.

குறித்த அடுப்புடன் இணைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டரினை ஒரு மாதத்துக்கு முதல் ஹட்டன் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்வனவு செய்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X