2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நபர் ஒருவரைப் பதம் பார்த்த பழம் வெட்டும் கத்தி

R.Maheshwary   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை மத்திய பஸ் தரிப்பிடத்திலுள்ள கழிவறை பணியாளர் ஒருவர், குறித்த பஸ் தரிப்பிடத்தில் பழக்கடை நடத்திச் செல்லும் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பது​ளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபர் கைதுசெய்யப்பட்டு பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் ஒருவர் தொடர்பில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கமே இந்த சம்பவத்துக்கு காரணமாகியுள்ளதென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .