2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நாயை தூக்கி இடுப்பு ஒடிய அடித்த இளைஞன்

Janu   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில சம்பவங்களை பார்க்கும் போது, மனிதாபிமானம் என்பது உயிரோடு இல்லை, செத்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. மனிதனுக்கு எதிராக மனிதன் செய்யும் செயல்பாடுகளை விட, வாய் பேச முடியாத ஜீவன்களான மிருகங்களுக்கு எதிராக மனிதர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

அவ்வாறான, மிகக் கேவலமான, மனிதாபிமானம் ​கொண்ட மனிதர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாத சம்பவமொன்று, நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஈனத்தனமான சம்பவம்,  நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்பரோ தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 அங்கு பாலத்துக்கு மேல் நாயொன்றின் வாயையும் முன்னங் கால்களையும் இறுக்கிப் பிடித்த இளைஞன், இடுப்பு உடையும் வரை தூக்கி பாலத்தின் மீதே அடித்தான். அப்போது, மற்றொரு நாய், அந்த நாயை முகர்ந்து சுற்றி வந்தது. இரண்டு முறை தூக்கி கீழே அடித்தான். அப்போது,

வயது குறைந்த சிறுவனின் குரலும் மற்றொரு ​இளைஞனின் குரலும் கேட்கிறது. எனினும், எத்தனை பேர் அவ்விடத்தில் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், நிழல் பிரகாரம், ஒரு சிறுவனும், இளைஞனும் இருந்துள்ளனர். 

ஒரு இளைஞன்: தூக்கி அடிச்சி தூக்கி வீசி விடு

தண்ணியில வீசி விடு

அப்போது, நாளை தூக்கி கீழே அடித்த இளைஞன், அந்த நாயை அல்லாக்கா தூக்கிக்கொண்டு பாலத்துக்கு நடுவே சென்றான்.

அப்போது அங்கிருந்த சிறுவன், “ஏய் பாவம்டா”

எனினும், அல்லாக்கா தூக்கிக்கொண்டு சென்ற அந்த இளைஞன், பாலத்தின் மேலிருந்து, ஆற்றில், வேகமாக தண்ணீர் ஓடும் இடத்தில் நாயை தூக்கி தலைகீழாக அடிக்கும் வகையில் வீசி விட்டான்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் பாலத்துக்கு கீழே ஓடோடி சென்ற சிறுவன், சிறு நிமிடங்களுக்கு பின்னர் மேலே ஓடி வந்துவிட்டான். அந்த நாய்க்கு என்ன நடந்தது என்பது தெரியவரவில்லை.

அயல் வீட்டாருக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தாருக்கும் உள்ள பழைய விரோதம் காரணமாக இந்த வளர்ப்பு நாயை, குறித்த இளைஞன் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக 15வயதுடைய குறித்த இளைஞன் நானுஒயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் வைத்து பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிருகங்கள் சித்திரவதை சட்டத்தின் கீழ் அந்த இளைஞனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  எஸ். சதீஸ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .