2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நல்லத்தண்ணியிலுள்ள மலசலக்கூட தொகுதி நவீனமயமாகும்

R.Maheshwary   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் நலன் கருதி, நல்லத்தண்ணி நகரில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மலசலக்கூட தொகுதிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பவள்ளியின்  வேண்டு கோளுக்கிணங்க, மத்திய மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடலும் களவிஜயமும் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது தவிசாளருடன் ஜப்பானின் Dulki Axis Environment (pvt) Ltd நிறுவனத்தின் Director Rui Owase மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .