2024 ஜூன் 17, திங்கட்கிழமை

நுவரெலியா வலயக் கல்வி பணிமனையில் தமிழ் புறக்கணிப்பு?

Freelancer   / 2024 மே 25 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் அதிபர்களுக்கான கூட்டம் நடைபெறுகின்றமை தொடர்பாக தமிழ் பாடசாலை அதிபர்களுக்கும் சிங்கள மொழியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பாக தமது அதிருப்தியை அதிபர்கள் வெயிட்டுள்ளனர்.

இந்த கடிதமானது 22.05.2024 திகதியிடப்பட்டு அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல அதிபர்கள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அண்மைக் காலமாக அநேகமான கடிதங்கள் இவ்வாறு கிடைக்கப் பெறுவதாகவும் அதிபர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த காலங்களில் கடமையில் இருந்த பல வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர்கள் தமிழ் மொழியில் கடிதங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் தங்களுக்கு அறிவித்திருந்தனர் எனவும், புதிதாக வருகை தந்துள்ள வலய கல்வி பணிப்பாளர் தொடர்ந்து இவ்வாறான செயற்படுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிபர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இந்த கடிதத்தில் கூட்டம் இடம்பெறுகின்ற திகதி குறிப்பிடப்படாமல் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே கல்வி பணிமனையின் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற கடிதங்கள் எந்தவிதமான பொறுப்பு கூறலும் இன்றி அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பாக கல்வியாளர்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளதோடு இந்த கடிதத்தை கையெழுத்திட்டுள்ள கல்வி பணிமனையின் வலய கல்வி பணிப்பாளர் கடிதத்தை முழுமையாக வாசிக்காமல் கையெழுத்திட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த கல்வி பணிமனையின் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இந்த கூட்டத்தை தாங்கள் இரத்து செய்துள்ளதாகவும் அடுத்த கூட்டம் தொடர்பாக இரண்டு மொழிகளிலும் அறிவிப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பிடம் இருந்தும் முறைப்பாடுகள் சென்றதை தொடர்ந்து இந்த கூட்டத்தை இரத்து செய்ய முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X