2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நவீன வசதிகளுடன் கூடிய தேசிய கட்டட ஆராய்ச்சி அலுவலகம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய தேசிய கட்டட ஆராய்ச்சி அலுவலகங்களை அமைப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய கட்டுமானங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு சான்றிதழ்களை வழங்கும் பணியை, தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் 9 மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதால் குறித்த பணியை செயற்றிறன் மிகுந்த முறையில் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 2 மாவட்டங்களில், நவீன ஆய்வு கூட வசதிகளுடன் நிரந்தர அலுவலக கட்டடடங்களை நிர்மாணிப்பதற்கும், பின்னர் தேவையின் அடிப்படையில் பிற மாவட்டங்களிலும் குறித்த அலுவலகக் கட்டடங்களை அமைப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவால் முன்வைக்கப்பட்ட தகவல்களை, அமைச்சரவை கவனத்திற் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .