R.Maheshwary / 2022 மார்ச் 16 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி டி. பொன்மணி, பதுளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளார்.
கணேசன் கலைச் செல்வன், கட்டார் நாட்டில் தொழில் செய்து வந்தவராவார். அந் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் பல மாதங்களாகியும், இதுவரை வீடு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பணியகமும், கணேசன் கலைச்செல்வன், இலங்கைக்கு பல மாதங்களுக்கு முன்பே, திரும்பிவிட்டதாகவும், அவர் இலங்கையில் எங்கு இருக்கின்றார் என்பது தமக்கு தெரியாதென்றும் கூறியதாக, அவரது மனைவி குறிப்பிடுகிறார்.
இப்படத்தில் காணப்படும் கணேசன் கலைச்செல்வனை அறிந்தவர்கள், கண்டவர்கள் எவருமிருப்பின், அவரது மனைவியான டி. பொன்மலர் என்பவருடன் - 075-3425661 என்ற கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026