2025 மே 17, சனிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நுவரெலியாவுக்கு

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த கல்வி சுற்றுலாவை மேற்கொண்டு, நாடு பூராகவும் இருந்து அதிகளவான மாணவர்கள் நுவரெலியாவுக்கு 5 வருடங்களின் பின்னர் நேற்று (29) வருகைத் தந்திருந்தனர்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கொரோனா  காரணமாக சுமார் நான்கு வருடங்களாக பாடசாலை மாணவர்கள் கல்வி மற்றும் பொழுதுப்போக்கு பயணங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதார மற்றும் சுகாதார நிலைமைகளின் மீட்சியுடன், காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கடந்த சில காலமாக இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறைக்கு முன்னர் வருடாந்த கல்வி மற்றும் பொழுதுப்போக்கு பயணத்திற்காக நுவரெலியா நகரத்தை தெரிவு செய்துள்ளனர்.

கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்காக நுவரெலியாவுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நுவரெலியா பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக நுவரெலியா பொலிஸ்மா அதிபர் ஹேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகரசபையானது பாடசாலை மாணவர்களுக்கு முறையான சுகாதாரத்தை வழங்குவதற்கு உழைத்துள்ளதாக நுவரெலியா மாநகரசபையின்' மாநகர சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .