ஆ.ரமேஸ் / 2017 ஜூன் 16 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா நானுஓயா நகரில், இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில், பொலிஸ் அதிகாரிகள் எழுவருக்கு, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் பிரதீப் த.டி.சில்வா, இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், நேற்று காலை பாதையை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நேற்றைய தினமே நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .