2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நாரங்கல மலைப் பகுதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

R.Maheshwary   / 2022 மார்ச் 30 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

பதுளை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த சொரணாதொட்ட- நாரங்கல மலையைப் பார்வையிடுவது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தடையையும் மீறி, அண்மை சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

அத்துடன் அந்த மலைப் பகுதியில் கூடாரங்களை அமைத்து, இரவில் தங்குவதாக இன்று (30) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மலைப் பகுதிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளால் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அங்கு, மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த 22 வயது இளைஞர் ஒருவர், 1,200 பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததையடுத்து, நாரங்கல மலைப்பகுதியில் இரவு நேரத்தில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

எனினும் தற்போது இந்தத் தடையையும் மீறி, அங்கு செல்பவர்கள் கூடாரம் அமைத்து தங்குவதாகவும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X