2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாளாந்தம் பயணிக்கும் பஸ்களை அனுமதிக்கவும்

R.Maheshwary   / 2023 ஜனவரி 30 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நானுஓயா- ரதெல்ல குறுக்கு வீதியூடாக தினமும் சேவையில் ஈடுபட்ட தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சமைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமாவது, தற்போது அவ்வீதியூடாக பயணிக்க அனுமதி வழங்க வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த வீதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தையடுத்து குறித்த வீதியுடனான கனரக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குறுக்கு வீதியூடாக நாளொன்றுக்கு 40 தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த பஸ்கள் அனைத்தும் ஹட்டனிலிருந்து நுவரெலியா வரையும் நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரையும் சேவையில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக குறித்த குறுக்கு வீதியூடாக கதிர்காமம், மட்டகளப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான நீண்ட தூர பஸ்களும் சேவையில் ஈடுபட்டதுடன், தற்போதைய போக்குவரத்து தடை காரணமாக குறித்த சகல பஸ்களும் ரதெல்ல- கிரி​மெட்டிய சுற்றுவட்டம் ஊடாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

குறித்த சுற்றவட்டப் பாதையில் பஸ்கள் சேவையில் ஈடுபடும் போது 7 கி​லோமீற்றர் தூரம் அதிகமாக பயணிக்க வேண்டி இருப்பதுடன் குறித்த வீதியில் அதிக வளைவுகளும் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் தற்போது ரதெல்ல குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளதால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாகவும் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவற்றை கவனத்தில் கொண்டு குறித்த ரதெல்ல குறுக்கு வீதியில் அன்றாட சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதியை வழங்குமாறும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .