Freelancer / 2022 மே 06 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய பேருந்து சேவைகள் சில இடம்பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நாவலப்பிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு வருகின்றவர்கள் வழமைபோல் வந்து நீண்ட வரிசையில் காத்து இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் நாவலப்பிட்டி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்பிக் கொள்வதற்கான நீண்ட வாகன வரிசையும் காணப்படுகின்றது. (R)



7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago