R.Maheshwary / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் மைக்கல் செபஸ்டியனி மறைவு இலகுவில் ஈடு செய்ய முடியாதது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
1965ஆம் ஆண்டு வி கே வெள்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தினை ஸ்தாபிக்கும்போது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர். அவர் மறைந்த பின்னும் அதே கொள்கையோடு சங்கத்தினை வழிநடத்தியவர்களில் ஒருவர்.
1965ல் இருந்து இன்றுவரை 56 வருடங்கள் சங்கத்தின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் செயற்பட்ட ஒரு சிறந்த நிர்வாகியை இழந்திருக்கின்றோம்.
பிரதிநிதியாக சங்கத்தில் இணைந்து, உதவி செயலாளர், நிர்வாக செயலாளர் என பதவி வகித்ததோடு, கடந்த 20 வருட காலமாக நிதி செயலாளராக பணியாற்றிய இவர் தங்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
சங்கத்தின் இக்கட்டான நிலைமையில்கூட சங்கத்திற்காகவே உழைத்தவர். அவரின் இழப்பு பெரு வேதனை தருகிறது அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .