R.Maheshwary / 2022 மார்ச் 17 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம் அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.
மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026