Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
மொஹொமட் ஆஸிக் / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு, நாட்டின் அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளனவென, அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி - பொல்கொல்லை திறந்த பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இடதுசாரிக் கட்சிகள் என்று அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளன என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் இடையில், நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, இன்னும் ஓரிரு நாட்களில் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதன் பின், புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தமது கட்சியின் நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுப் பதவிகளுக்காக, புதிய அங்கத்தவர்களது பெயர்கள் முன்மொழி யப்பட்டபோது, அதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை; மாற்றுப்பெயர்கள் முன்மொழியவும் இல்லை. அக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட அனைத்துப் பெயர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டார்.
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago