2025 மே 05, திங்கட்கிழமை

நிவாரண ​பொதிகள் கொள்ளை: அறுவர் கைது

Editorial   / 2021 மே 28 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.சதீஸ், எம்.கிருஸ்ணா

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருள்கள் அடங்கிய சுமார் 24 பொதிகளை கொள்ளையடித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை செல்வகந்தை தோட்டத்திலே​யே இந்த சம்பவம், நேற்றிரவு (27) இடம்பெற்றுள்ளது.

அத்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளில், மீதமிருந்த நிவாரணப் பொதிகள், தோட்டத்திலுள்ள கொழுந்து நிறுக்கும் மடுவத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்குவந்த அறுவர் அடங்கிய குழுவினரை, காவலாளியை அச்சுறுத்திவிட்டு, தாம் வந்திருந்த முச்சக்கர வண்டியொன்றில், 24 பொதிகளை ஏற்றிக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

விடயத்தை கேள்வியுற்ற மக்கள், ஒன்றுதிரண்டு அவர்களை அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X