2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நிவாரண விலையில் பொருள்கள்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாழ்வாதார நெருக்கடிக்கு மத்தியில், தோட்டத்
தொழிலாளர்களுக்கு நிவாரண விலைக்கு சதொச மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்து உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (23) கொட்டகலை சீ.எல்.எப் இல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பானது தற்காலிகமானது என தெரிவித்த அவர்,

எதிர்கட்சி கூறும் வகையில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை என்றும்
தெரிவித்தார். எமக்கு அண்டை நாடான இந்தியாவில் கூட எரிபொருளின் விலை அதிகரிப்பு இலங்கையை விட அதிகம் என்றார். தொழிலாளர்களுக்கு 1,000 சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமை தொடர்பில், அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் சகல தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், முன்னெடுக்கப்படும் பணிபகிஷ்கரிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த பணிபகிஷ்கரிப்பை 27ஆம் திகதியுடன் நிறைவுக்கு
கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்துடனான கலந்துரையாடல்
வெற்றியளித்துள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X