2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நிவித்திகலையில் சட்டத்தை மீறிய 21 பேர் கைது

Editorial   / 2021 மே 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவ்டத்தில், நிவித்திகலை, கரவிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்கள் மீறிய குற்றச்சாட்டில் 21 பேர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிவித்திகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிவங்க பாலசூரிய தலைமையில் பொலிஸார், மேற்படி நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, சட்டத்திட்டங்களை மீறியிருந்த வயோதிபர்கள், சிறுவர்கள் சிலர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X